பெட்ரோல் பங்கில் பணம் திருட்டு – ஊழியருக்கு வலை..!

கோவை சாய்பாபா காலனி, மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இருந்த ரூ. 20 ஆயிரத்தை காணவில்லை. இது குறித்து மேனேஜர் செந்தில் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்துள்ளார் .புகாரில் அந்த பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்த சதீஷ் என்பவர் இந்த பணத்தை திருடி சென்றுள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் சதீஷ் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..