தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு பள்ளி மாணவ, மாணவியர், கிராமப்புற ஏழை கல்லூரி மாணவ,மாணவியர்கள் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற நவீன நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைத்து வருகிறது. ஈரோடு மாவட்ட அளவில் அந்த அறிவு சார் மையம் மற்றும் நவீன இணையதள வசதியுடன் கூடிய நூலகம் அமைக்க கோபி நகராட்சி தலைவர் என்.ஆர்.நாகராஜ் பெரும் முயற்சி மேற்கொண்டார். இதற்காக நகரின் மையப்பகுதியில் கோபி மட்டுமின்றி சத்தியமங்கலம், பவானி, அந்தியூர், தாளவாடி, நம்பியூர், பெருந்துறை மட்டுமின்றி அருகில் உள்ள திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட குன்னத்தூர் போன்ற பகுதிகளில் இருந்தும் எளிதில் வந்து செல்லக்கூடிய பகுதியாக கோபி இருப்பதையும், தற்போது அறிவு சார் மையம் அமைக்கப்பட்டு உள்ள இடம் நகரின் மையப்பகுதி என்பதையும், அருகில் தினசரி மார்க்கெட் உள்ள நிலையில், அறிவுசார் மையம் அமைக்கப்பட்டு உள்ள இடத்தில் வணிக வளாகம் அமைத்தால் நகராட்சிக்கு மாதம் பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும் என்ற நிலையில், அதையும் பொருட்படுத்தாமல் ஏழை மாணவ, மணவிகளின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருக்கும் என்பதால் பெரும் முயற்சி மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து நேற்று தமிழக முதலமைச்சர் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக இந்த அறிவுசார் மையம் மற்றும் நூலகத்தை திறந்து வைத்து உரையாற்றினார். அதைத்தொடர்ந்து கோபி நகராட்சி தலைவர் என்.ஆர்.நாகராஜ் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.நிகழ்ச்சியில் கோபி நகராட்சி ஆணையாளர் டி.வி.சுபாஷினி, பிகேஆர் மகளிர் கல்லூரி மாணவிகள், அரசு பள்ளி மாணவ, மணவியர் கலந்து கொண்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0