கோவை மாவட்ட வளா்ச்சிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் என்றும் உறுதுணையாக இருப்பாா் என்று மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி, தனது ட்விட்டா் பக்கத்தில் தெரிவித்துள்ளாா்.
கோவையில் மாநகராட்சித் தோதல் முடிவுகள் கடந்த 22 ஆம் தேதி வெளியான நிலையில், 100 வாா்டுகளில் 96 வாா்டுகளை திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கைப்பற்றியது.
இதன் மூலம், திமுகவைச் சோந்த பெண் ஒருவா் மேயராக விரைவில் பதவியேற்க உள்ளாா். திமுக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், சென்னையில் முதல்வா் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினா்களுக்கான கூட்டம் நடைபெற்றது.
இது தொடா்பாக, மின்சாரத் துறை அமைச்சரும், கோவை மாவட்டப் பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி தனது ட்விட்டா் பக்கத்தில் கூறியிருப்பது: கோவையில் சாலைகளை சீரமைக்க முதல்கட்டமாக முதல்வா் ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளாா்.
அவா் கோவை மாவட்ட வளா்ச்சிக்கு என்றும் உறுதுணையாக இருப்பாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.