கோவை: திருப்பூர் திருமுருகன் பூண்டி காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக (எஸ். எஸ். ஐ) பணிபுரிந்து வருபவர் மருதப்ப பாண்டியன் இவர் கோவை -சேலம் தேசிய நெடுஞ்சாலையில்ரோந்து சுற்றி வந்தார். அவருடன் ஆயுதப்படை போலீஸ்காரர் குணசுதன் என்பவரும் பணியில் இருந்து உள்ளார். அப்போது அங்கு தனியாக நின்று கொண்டிருந்த ஒரு காரில் 2 பேர் இருந்துள்ளனர். அவர்களிடம்விசாரணை நடத்திய போது குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. இதை யடுத்து கார் உரிமையாளரிடம்லஞ்சமாக ரூ 7 ஆயிரம் மற்றும் பீர் பாட்டிலை வாங்கியதுடன் காரில் இருந்த விலைமதிப்புள்ள இயர்பட்சையும் எடுத்துக் கொண்டார்களாம்.இதனால் அதிர்ச்சி அடைந்த கார் உரிமையாளர் இது குறித்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்செய்தார். இது குறித்துபுதிதாக பொறுப்பேற்றுள்ள போலீஸ் கமிஷனர் லட்சுமி சம்பந்தப்பட்ட இருவரிடம் விசாரணை நடத்தினார். இதில் அவர்கள் லஞ்சம் வாங்கியதும், இயர் பட் சை எடுத்துக் கொண்டதும் உறுதி செய்யப்பட்டது. இதை யடுத்து சிறப்பு இன்ஸ்பெக்டர் மருதப்ப பாண்டியன் , ஆயுதப்படை போலீஸ்காரர் குண சுதன் ஆகியோரை அதிரடியாக சஸ்பெண்ட்செய்து உத்தரவுபிறப்பித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0