ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்­பியின் அரா­ஜக போக்­கு…மாற்­றம் செய்வாரா… டிஜிபி சங்கர் ஜிவால்..!

ஸ்ரீவைகுண்டம்: வியா­பா­ரி­களை பார்த்­து ” வேசியின் மகன்களா? ஒழுங்கா கடையை எடுங்­கடா” என அசி­ங்க­மான வார்த்­தை­களால் திட்­டிய டிஎஸ்பி ராம­கி­­ருஷ்ணன் – டிஜிபியிடம் வியா­பா­ரிகள் சங்கம் ­சார்பில் புகார் அளிக்க முடி­வு எடுக்­கப்­பட்­டுள்­ள­து.

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் சாலை விரிவாக்கத்திற்காக ஆக்கிரமிப்பு(!)கடைகள் ஜேசிபி எந்திரம் கொண்டு உடைக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் கடும் அதிருப்தியடைந்­துள்­ளனர். வியாபாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்­பட்டு பர­ப­ரப்பான சூழ்­நிலை ஏற்­பட்­டது.

1. ஆக்கி­ர­மிப்பு தொடர்­பாக முன் அறி­விப்பு எதுவும் வியா­பா­ரி­க­ளுக்கு தெரி­வி­க்­கப்­ப­ட­வில்­லை.
3. எதிர்த்த வியா­பா­ரிகளை சிறையில் தள்ளி விடுவேன் என டிஎஸ்பி ராம­கி­ருஷ்ணன் மிரட்­டல் விடுத்­துள்ளார். இந்த அரா­ஜகப் போக்கு பொது­மக்கள் மற்றும் வியா­பா­ரி­க­­­ளி­டையே காவல்­து­றை மீது வெறுப்­­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­து.

எதேதோ காரணம் சொல்லி சிறுவியாபாரிகளின் கடைகளை ரொம்ப ஈசியா உடைச்சிட்டாங்க..ஓகே ஆக்கிரமிப்பு நிலங்கள்ல கட்டப்பட்டிருக்குற பெரிய பெரிய நிறுவனங்களின் வணிக வளாகங்களையும், அப்பார்ட்மென்ட்டுகளையும் இதே மாதிரி இடித்து தள்ளுவார்களா? பஞ்சமி நிலங்களும், வக்ப் நிலங்களும் எப்போது மீட்கப்படும்?