ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி 16ஆம் ஆண்டு கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா – 2024

கோபி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியில், பதினாறாவது கல்லூரி தின விழா 06.04.2024(சனிக்கிழமை) அன்று நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் செயலாளரும், பவானி சட்ட மன்ற தொகுதியின் உறுப்பினருமான திரு. கே. சி. கருப்பணன் அவர்கள் இவ்விழாவிற்கு தலைமையேற்று விழாவினை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர் கடந்த ஆண்டிற்கான செய்தி மடல் வெளியிட்டார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ப. தங்கவேல் அவர்கள் அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். முன்னதாக 16ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு கல்லூரியின் முதல்வர் முனைவர். ப. தங்கவேல் அவர்களின் முயற்சியினாலும் இயந்திரவியல் துறையை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர் திரு. டி. மோகன்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும் நான்காம் ஆண்டு மாணவர்களான ஜி. ஹரிஹரன், வி. நித்தியானந்தன், ஜி. சுபாஷ், மற்றும் யு. விஜய பாஸ்கர் ஆகியோரால் வடிவமைக்கப் பட்ட மின்சார ஆம்னி (E-Vehicle) ரூபாய் 3 லட்சம் செலவில் கல்லூரிக்கு வழங்கப்பட்டது. இதனை கல்லூரியின் செயலாளர் அவர்கள் தொடங்கி வைத்து மின்சார ஆம்னியை வடிவமைத்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 10,000 அன்பளிப்பாக வழங்கினார். மேலும் இவ்விழாவில் அந்தந்த துறைச்சங்க பேனர்கள் அறிமுகப்படுத்தபட்டன. மாணாக்கர்களிடையே விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் பொருட்டு வெவ்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு முதல் இரண்டு இடம் பிடித்தவர்களுக்கு கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கல்லூரி தினத்தை முன்னிட்டு கலைத்திறன் போட்டிகளான குழுநடனம், பாட்டுப்போட்டி, தனி நடனம், குறும்படம், வினாடிவினா, மௌனமொழி நாடகம் மற்றும் மிமிகிரி ஆகியவை நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணாக்கர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணாக்கர்கள் ஒட்டுமொத்த கலைத்திறன் மற்றும் விளையாட்டிற்கான பரிசுகளைப் பெற்று கோப்பையை வென்றனர். இவ்விழாவில் கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழக தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் மற்றும் கல்லூரி அளவில் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களுக்கு கேடயங்களும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும் இவ்விழாவில் அண்ணா பல்கலைக்கழக தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று தந்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களும் சிறப்பு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த நூலக பயனர்களுக்கும் கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இவ்விழாவில் இன்ஸ்டாகிராமில் புகழ் பெற்ற பிரபலங்கள் திரு. ராவணா ராம் அவர்கள் ராப்பர் & லிரிஸிஸ்ட், ஆர்ட்டிஸ்ட் செல்வி. பிரியங்கா மஸ்தாணி, அவர்கள் யூட்டுபேர் மற்றும் திரு. ஸ்ரீராம் கார்த்திகேயன் அவர்கள் மிமிகிரி ஆர்ட்டிஸ்ட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தியும் உற்சாகப்படுத்தியும் விழாவை சிறப்பித்தனர். இவ்விழாவில் கல்லூரியின் தலைவர் திரு. பி.வெங்கடாசலம், நிர்வாக இயக்குனர்கள் திரு. கே. ஆர். கவியரசு, திரு.டாக்டர் கண்ணண், திரு. கே.எஸ். ஜோதி லிங்கம், தலைமை நிர்வாக அதிகாரி திரு. க. கெளதம், வெங்கடேஸ்வரா பிசியோதெரபி கல்லூரியின் முதல்வர் திரு. நந்தகுமார், பார்மசி கல்லூரியின் முதல்வர் முனைவர் இளங்கோ, நர்ஸிங் கல்லூரியின் முதல்வர் முனைவர் முத்துக்கண்ணுஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கல்லூரியின் துணை முதல்வர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவின் இறுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இயந்திரவியல் துறை உதவி பேராசிரியர் திரு. கண்ணகுமார் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர். சு. பிரகாசம் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இவ்விழா சிறப்பாக நடைபெற கல்லூரியின் முதல்வர் அவர்கள் சிறந்த வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் இருந்தார்.