ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதுகலை வணிகவியல் மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில் பொம்மநாயக்கன்பாளையம் ஊராட்சியில் விரிவாக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணியாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. பயிற்சியின் முதல் நிகழ்வாக வங்கி படிவங்கள் பூர்த்தி செய்தல் மற்றும் வங்கி காப்பீடு பற்றிய விழிப்புணர்வு நடைபெற்றது கல்லூரியின் முதல்வர் முனைவர்.ஆ. மோகனசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கினார். துணை முதல்வர் மற்றும் துறைத் தலைவர் முனைவர்.சி. நஞ்சப்பா அவர்கள் சிறப்புரையாற்றினார். ஊராட்சி மன்ற தலைவர் திரு. சண்முகத்தரசு அவர்கள் கலந்து கொண்டார். உதவிபேராசிரியர் திரு. கிருஷ்ணகுமார் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் துணை மேலாளர் திரு. இளங்கோ அவர்கள் பங்கேற்று பேசினார். அதில் அவர் கூறியதாவது, மக்கள் அனைவரும் வங்கியில் கணக்கு துவங்கி அதில் சேமிப்பு திட்டங்களில் இணைந்து சேமித்தல் தொடர்பாகவும் ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு பற்றியும் விரிவாக மக்களிடையே தொகுத்துக் கூறினார். பொதுமக்கள் தங்களது சந்தேகங்களையும் கேட்டறிந்தனர். இறுதியாக உதவி பேராசிரியர் திரு. அஜித்குமார் நன்றி கூறினார்.கல்லூரி பேராசிரியர்கள் திரு.சதீஷ்,முனைவர். கோமதி, முனைவர். சவிதா,திருமதி. பொன்மொழி, செல்வி. சங்கீதா மற்றும் கிராம அலுவலர்கள் பங்கேற்றனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0