இந்து திருக்கோயில் கூட்டமைப்பு சார்பில் பேரணாம்பட்டில் ஸ்ரீராமர் படம் ஊர்வலம்….

அயோத்தி ஸ்ரீ ராமர் ஆலய பிராணப் பிரதிஷ்டை கும்பாபிஷேக விழா நேற்று அயோத்தியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு சார்பில் மாநில  செயலாளர் ஹேம்பிரசாத் தலைமையில் ஸ்ரீராமர் படம் பக்தர்கள் ஊர்வலமாக ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷத்துடன் எடுத்துச் சென்றனர்  இந்த ஊர்வலமானது பேரணாம்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள திருப்பதி கெங்கையம்மன் ஆலயத்தில் ஸ்ரீராமர் படம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று . அங்கிருந்து திரு.வி.க நகர் பகுதியில் உள்ள ஸ்ரீராமர் ஆலயத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.  இதில் பக்தர்கள் பால்குடம் ஏந்தியவாறு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பின்னர், திருவிக நகர் பகுதியில் உள்ள ராமர் ஆலயத்தில் ராமருக்கு சிறப்பு  அபிஷேகம் உள்ளிட்ட விசேஷம் திரவிய அபிஷேகங்கள் நடைபெற்றது. மேலும் பக்தர்கள் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றி ஸ்ரீராமரை வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு நிர்வாகிகள், பேரணம்பட்டு நகர இந்து முன்னணி நிர்வாகிகள். பாஜக நகர பொருளாளர் முரளி, நகர நிர்வாகிகள் பாபு, , மாவட்ட தலைவர் கந்தன், நகரத் தலைவர் பாபு, சரவணன், ஒன்றிய தலைவர் வனஜா ரமேஷ், வழக்கறிஞர் கோபி சத்தியமூர்த்தி, மற்றும் அதிமுக நகர செயலாளர் சீனிவாசன், சிவாஜி உள்ளிட்ட நகர முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். காவல்துறை சார்பில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.