தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு சிறப்பு புகைப்படக் கண்காட்சி- மாவட்ட ஆட்சித் தலைவர் சா.ப.அம்ரித் திறந்து வைத்தார்.!!

நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு,
செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு
புகைப்படக்கண்காட்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர்
 திறந்து வைத்து பார்வையிட்டார்.
 நீலகிரி மாவட்டம்  தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு,
உதகை அரசு பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், செய்தி மக்கள் தொடர்பு
துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு புகைப்படக்கண்காட்சியினை மாவட் ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித்  திறந்து வைத்து பார்வையிட்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்ததாவது:
தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா அவர்கள்
பெயர் சூட்டிய  18 ஆம் நாளினை “தமிழ்நாடு நாள் விழா”வாக சிறப்பாக
கொண்டாடும் வகையில், உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், தமிழ்நாடு நாள் முக்கியத்துவம் மற்றும் உழவர் நலன் காக்கும் அரசு, கல்வி மேம்பாடு தந்தையுமான முதல்வர், இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு, போன்ற அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், சோதனையிலும் சாதனை கொரோனா பெருந்தொற்று தடுப்பு பணிகள் மற்றும் மழை பாதிப்பு துயர்நீக்க நடவடிக்கைகள் போன்றவற்றை குறித்தும் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த புகைப்படக்கண்காட்சியானது 18.07.2023 முதல் 23.07.2023 வரை 6 நாட்கள்
நடைபெறுகிறது. தினந்தோறும் பள்ளி மாணவ, மாணவியர்கள் இதனை கண்டு
களிக்கும் வகையில் முதன்மை கல்வி அலுவலர் மூலமாக நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இன்றைய தினம் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தின் மூலம் தமிழ்நாடு நாள் குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டு ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கண்டு களித்தனர்,மற்றும் கண்காட்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும் குறும்படம் ஒளிபரப்பப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்,முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் உதகை அரசு மேல்நிலைப்பள்ளி, சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேக்ரியாட் மேல்நிலைப்பள்ளி, உதகை செயிண்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சார்ந்த சுமார் 400 மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
இப்பேரணியானது உதகை இரயில் நிலையத்தில் தொடங்கி அப்பர் பஜார், கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ் வழியாக பழங்குடியினர் பண்பாட்டு மையத்தினை சென்றடைந்தது. இப்பேரணியில், “தமிழ் வாழ்க”, “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வுகளில், உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், மாவட்ட
காவல் கண்காணிப்பாளர் முனைவர்.கி.பிரபாகர், மாவட்ட ஊராட்சித்தலைவர் மு.பொன்தோஸ், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கீதா, மாவட்ட
ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்ரியா, உதகை வருவாய்
கோட்டாட்சியர் துரைசாமி, உதகை நகர்மன்ற தலைவர் வாணீஸ்வரி,
துணைத்தலைவர் ரவிக்குமார், உதகை ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன்(எ)
மாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சையத் முகம்மத், உதகை நகராட்சி
ஆணையர் ஏகராஜ், உதகை வட்டாட்சியர் சரவணக்குமார், பள்ளி ஆசிரியர்,
ஆசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.