டோக்கியோ : ராக்கெட்டுகளில் மக்களை விண்வெளிக்கு அனுப்பும் சுற்றுலா திட்டங்களில் அமெரிக்கா அதிக கவனம் செலுத்தி வரக்கூடிய நிலையில், நவீன பலூன்கள் மூலம் மக்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் புதிய தொழில்நுட்பத்தில் ஜப்பான் வெற்றி பெற்றுள்ளது.
இதனால் குறைந்த செலவில் மக்கள் விண்வெளிக்கு சுற்றுலா செல்லலாம் என்கிறார்கள் ஜப்பான் விண்வெளி நிபுணர்கள். ஜப்பானின் ஐவாயா நிறுவனம் பலூன்கள் மூலம் மக்களை விண்வெளி சுற்றுலா அனுப்பும் திட்டத்தை அறிவித்துள்ளது. பூமியின் வளைவை தெளிவாகக் காணக்கூடிய 25 கிமீ உயரம் வரை பறக்கும் திறன் கொண்ட காற்று புகாத 2 இருக்கை உள்ள பலூன் கேபினை ஐவாயா நிறுவனம் உருவாக்கியுள்ளது.
4.9 அடி விட்டம் கொண்ட இந்த டிரம் வடிவு பிளாஸ்டிக் கேபின், விண்வெளியையும் அங்கிருந்து பூமியையும் எளிதில் பார்க்கும் வகையில் பெரிய ஜன்னல்களை கொண்டுள்ளது. இது ஜப்பானின் ஓகேடுவில் இருந்து புறப்பட்டு 2 மணி நேரத்தில் 25 கிமீ உயரத்தை எட்டி அங்கு 1 மணி நேரம் நிலைநிறுத்தப்பட்டு பின்னர் பூமிக்கு திரும்பும் வரும் அக்டோபரில் தொடங்க உள்ள பலூன் விண்வெளி சுற்றுலாவுக்காக இந்திய மதிப்பில் ரூ.6 லட்சம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.