சூலூர் கலங்கள் ஊராட்சி மன்றம் கிரீன் பவுண்டேஷன் இணைந்து ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் பனை விதைகள் விதைப்பு திட்டம் காசி கவுண்டன்புதூர் பிரிவு குட்டை பகுதியில் துவங்கப்பட்டது. சூலூர் வட்டாட்சியர் தனசேகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலங்கள் கிரீன் ஃபவுண்டேஷன் அன்புராஜ் வரவேற்பில் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் புஷ்பலதா ஆகியோர் முன்னிலையில் சன் பிட்ஸ் இயக்குனர் சோனியா சரவணன், வீனஸ் டெக்ஸ்டைல்ஸ் இயக்குனர் மகேஷ் திட்டத்தை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயற்கை வேளாண் விஞ்ஞானி மயில்சாமி, விஷ்ணு குழுமம் செல்வராஜ், மலைக்காட்டுகள் ஆராய்ச்சியாளர் மாணிக்கம், பசுமை நிழல் அறக்கட்டளை விஜயகுமார், சுந்தர்ராஜ், பட்டணம் ஓடிபி பவுண்டேஷன் மோகன்ராஜ், நம்ம நவக்கரைவளம் மகேஷ் , காரணம்பேட்டை இயற்கை ஆர்வலர் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர எல் எம் டபிள்யூ செல்வராஜ் நன்றி கூறினார் தொடர்ந்து அழிந்து வரும் பனை மரங்களை மீட்டெடுக்க பனை விதைகளை சூலூர் பகுதியில் முழுவதும் விதைத்திட ஒரு லட்சம் விதைகள் கொண்டுவரப்பட்டு அவற்றை எவ்வாறு விதைக்க வேண்டும் என்பது பற்றிய கருத்துக்கள் கூறப்பட்டு குட்டையின் கரை முழுவதும் பனை விதைகள் விதைக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு ஆர்வத்தோடு பனைமர விதைகளை விதைத்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0