தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததைவிட அதிகமாக பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் எதிர்பார்த்ததைவிட தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை மைய இயக்குனர் மிருத்யுஞ்சய் மொகபாத்ரா, “நடப்பு பருவமழை காலத்தில் மழைஅளவு சராசரி 103% இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதை விட அளவு அதிகம்.
குறிப்பாக மத்திய மற்றும் தெற்கு இந்தியப் பகுதிகளில் மழைப்பொழிவு மிகவும் அதிகமாகவும், வடகிழக்குப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைவாகவும் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த 29ஆம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதாக முன்பே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.