கோவை போத்தனூர் அருகே உள்ள செட்டிபாளையம் , கலைஞர் நகரை சேர்ந்தவர் தேவா ( வயது 43) கூலி தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி (வயது 40) இவர்களுடைய மகன் ரஞ்சித் குமார் (வயது 24) நேற்று தேவாவுக்கும் அவரது மகன் ரஞ்சித் குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர் .தனலட்சுமி சமாதானம் செய்ய முயற்சித்தார் .ஒரு கட்டத்தில் தேவா மகன் ரஞ்சித் குமாரை கட்டையால் தாக்கினார். இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித் குமார் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து தனது தந்தை தேவாவை குத்தினார் .இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் தனலட்சுமி மயங்கி விழுந்து அதே இடத்தில் இறந்தார் . காயம் அடைந்த தேவா அவரது மகன் ரஞ்சித்குமார் ஆகியோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தந்தையை மகன் கத்தியால் குத்தியதால் அதிர்ச்சியில் தாய் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0