புதுச்சேரியில் சமுதாய நலக்கூடம் திறப்பு..!

புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு வரை நிலை கழகம் மூலம் வில்லியனூர் சட்டமன்ற தொகுதி கொம்பாக்கம் பேட்டில் ரூ.1 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூட கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் செல்வம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, ஆகியோர் கலந்து கொண்டு சமுதாய நலக்கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். இந்த சமுதாய நலக்கூடத்தின் மூலம் சுமார் 15 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன் பெறுவார்கள். இந்த விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் கேசவன், இயக்குனர் இளங்கோவன், பாட்கோ மேலாண் இயக்குனர் அசோகன், செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் பக்தவச்சலம், இளநிலை பொறியாளர் திருவருட்செல்வம் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சோமசுந்தரம், செல்வநாதன், தர்மராஜ் மதிமுக மாநில அமைப்பாளர் கபிரியேல், தொகுதி துணை செயலாளர் ஜகன்மோகன், ஜனார்த்தனன், ரமணன், சபரிநாதன், தண்டுக்கரை ஹரிஹரன், மற்றும் ஒதியம்பட்டுபேட் பஞ்சாயத்தார்கள் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.