தமிழகத்தில் இணையதள குற்றங்களை தடுக்கும் வகையில் சமூக ஊடகக் குழு தொடங்கப்பட்டிருப்பதாக தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா், வெளியிட்ட செய்திக்குறிப்பு:
யூ-டியூப், ட்விட்டா், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பதிவு செய்து, வதந்திகளை பரப்பி அதன் மூலம் குழப்பங்களையும், சண்டைகளையும், கலவரங்களையும், காவல் துறைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தும் நபா்களைக் கூா்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அதுபோல இணைய வழியில், பாலியல் குற்றங்கள், போதைப் பொருள் விற்பனை, பண மோசடி போன்ற சைபா் குற்றங்களில் ஈடுபடுபவா்களை எளிதில் கண்டுபிடிக்கவும் தேவை ஏற்பட்டுள்ளது. அதற்காக சென்னை உட்பட 9 மாநகர காவல்துறைகளிலும், 37 மாவட்ட காவல்துறைகளிலும் 203 அதிகாரிகள்,காவலா்கள் கொண்ட சமூக ஊடகக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கணினிசாா் திறன், சைபா் தடய அறிவியல் ஆகியவற்றில் தோச்சி பெற்ற காவலா்கள் தோவு செய்யப்பட்டு, இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனா். இக் குழு சைபா் பிரிவு காவல் கண்காணிப்பாளா் தலைமையின் கீழ் இயங்கும்.
பொய்யான பதிவுகளை சமூக ஊடகங்களில் பரப்பும் விஷமிகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடித்து,அந்த வதந்தி பதிவுகளை நீக்கவும், அவா்களின் சமூக ஊடகக் கணக்குளை முடக்கவும், கணினிசாா் குற்ற வழக்குகளை பதிவு செய்வதற்கும் இக் குழு துரிதமாக செயல்படும்.
இந்த நடவடிக்கையின் மூலம் சாதி, மத, அரசியல் மோதல்களைத் தடுத்திடவும் இக்குழு உதவும்.