ஹேர் க்ரீமில் தங்கம் கடத்தல்: ஐதரபாத் ஷம்சாபாத் விமான நிலையத்தில் பரபரப்பு..!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஷம்சாபாத் விமான நிலையத்தில் ஹேர் க்ரீம் மற்றும் மின்விசிறியில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மூன்று தனித்தனி விமானங்களில் வந்த பயணிகளிடம் சோதனை செய்தபோது சட்டவிரோத தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் அதிகாரிகள் நாள்தோறும் வெளிநாடுகளில் இருந்து வரும் சந்தேகம்படும் பயணிகளை சோதனை செய்து வருகின்றனர். கோலம்பூரில் இருந்து வந்த பயணி கொண்டு வந்த சீலிங் பேனில் இருந்து மறைத்து தங்கம் கொண்டு வந்தார்.

சிலிங் பேன் பேரிங்கில் 636 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதேபோல், ரியாத்தில் இருந்து வந்த மற்றொரு பயணி பேண்ட் பாக்கெட்டில் இருந்து 5 தங்க கட்டிகள் மீட்கப்பட்டன. இருவரிடமும் கைப்பற்றப்பட்ட தங்கம் ஒரு கிலோ 218.6 கிராம் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். இதேபோல் குவைத்தில் இருந்து வந்த பயணி கொண்டு வந்த ஹேர் க்ரீமை திறந்து சோதனை செய்தபோது அதில் ரூ.15.76 லட்சம் மதிப்புள்ள 259 கிராம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.