நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், IPS அவர்களின் உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் நாகூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட வெட்டாறு ECR ஆற்று பாலம் பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக சோதனை சாவடி வழியே சட்டத்திற்கு புறம்பாக நூதன முறையில் கடத்தி வரப்பட்ட 90ML அளவு கொண்ட 600 பாண்டி மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததுடன் இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட செல்லூர் பகுதியை சேர்ந்த R.ராஜேஷ்குமார்(33) , என்ற நபரை கைது செய்து பின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது போன்ற கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0