கோவை ரெயிலில் 14 கிலோ உயர்ரக கஞ்சா கடத்தல். வடமாநில பெண் கைது.

கோவைக்கு ரெயில் மூலம் போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க ரெயில்வே பாதுகாப்பு படையினர் (ஆர்.பி எப்) மற்றும் ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி கோவை ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரெயில் நிலையத்தில் நேற்று ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது பீகாரில் இருந்துகோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் ரெயில் கோவைக்கு வந்தது. உடனே போலீசார் அந்த ரெயிலில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனர். அதில் ஒரு பெட்டியில் இருந்த பெண் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினார். அவர் பீகாரைச் சேர்ந்த மின்டா தேவி ( வயது 38) என்பதும் பீகாரிலிருந்து கோவைக்கு உயர் ரக கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்தபெண்ணிடம் இருந்து 14கிலோ உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ 10 லட்சம் இருக்கும். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.