கோவை சிறைக்குள் கஞ்சா கடத்தல். 2கைதிகள் மீது வழக்கு.

கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைக்குள் பீடி, சிகரெட், புகையிலை கஞ்சா செல்போன் உள்ளிட்டவை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில கைதிகள் தடையை மீறி பயன்படுத்தி வருகின்றனர். இதை தடுக்க போலீசார் அடிக்கடி கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று சிறை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். இதில் தண்டனை கைதியான சரவணபாண்டி என்பவரிடமிருந்து 2 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை யடுத்து போலீசார் அவரிடம் விசாரணைநடத்தியதில் மற்றொரு கைதியான பிரவீன் குமாரை போலீசார் வழக்கு விசாரணைக்காக கடந்த 1 – ந் தேதி நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜரபடுத்திவிட்டு அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ஆனால் கோர்ட்டுக்கு சென்றபோது யாரிடமோ கஞ்சா வாங்கிய பிரவீன் குமார் அதனை தனது உள்ளாடையில் மறைத்து வைத்து சிறைக்கு எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைதிகள் சரவணபாண்டி, பிரவீன் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.