பெங்களூரில் இருந்து சென்னைக்கு கார் மூலம் பிரவுன் சுகர் கடத்தல் – 2 பேர் கைது

தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக் அவர்களுக்கு பெங்களூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் வழியாக சென்னைக்கு பிரவுன் சுகர் கஞ்சா ஆகியவற்றை சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக ஹிந்தியில் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாம்பரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ். ஸ்ரீதேவி மற்றும் ராம பிரபா மற்றும் போலீஸ் படையினர் குன்றத்தூரிலி ருந்து ஸ்ரீ பெருமந்தூர் நோக்கி செல்லும் சாலையில் நாகாத்தம்மன் கோவில் தெரு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது காரில் மின்னல் வேகத்தில் வந்த சுசுகி ஸ்விப்ட் டிசையர் கார் ka 03 mt 9855 இரும்பு தடுப்புகளை சாலையின் குறுக்கே போட்டு சோதனை செய்தனர்.காரின் உள்ளே 200 கிராம் பிரவுன் சுகர் மற்றும் 10 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை கைப்பற்றி இரு குற்றவாளிகளை கைது செய்தனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு சபீனா கட்டுன். வயது 25.தகப்பனார் பெயர் சாகேப் பாக ன் காசி தங்கா கிராமம் பந்தேல் போஸ்ட்
ஹுக்கிலி மாவட்டம் மேற்கு வங்காளம்.2. சக்திவேல் வயது 37. தகப்பனார் பெயர் ரவி.கன தன பள்ளி தெரு கோட்டையூர் சிவகங்கை மாவட்டம். இருவரையும் கைது செய்து ஸ்ரீ பெருமந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். காரில் கடத்தி வரப்பட்ட போதைப் பொருட்கள் இந்தியாவிலேயே எங்கும் கிடைக்காத அதிக சக்தி வாய்ந்த போதைப் பொருட்களாகும்.