சென்னையை அடுத்த ஆவடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மொத்த பணத்தையும் முதலீடு செய்து வீட்டு மனையை வாங்க முடியாதவர்கள் மாதந்தோறும் தவணை முறையில் பணம் செலுத்தி வீட்டுமனைகளை தனதாக்கிக் கொள்ளலாம் என்ற நப்பாசையில் ஏமாறுபவர்கள் ஏராளமானோர். கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வண்ண வண்ண போஸ்டர்கள் வீட்டு மனைகளை தவணை முறையில் பணத்தை செலுத்தி மனைகளை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள் என்ற விளம்பரத்தை பார்த்து கஸ்பர் மற்றும் ஏமாந்த இளித்தவாயர்கள் பலர் உள்ளனர் . ஜி ஆர்ரியல் எஸ்டேட் சென்னை வேலப்பன்சாவடி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஓனர் என்று கூறிக்கொண்ட ராமச்சந்திரனை பார்த்து வீட்டு மனைகளைப் பற்றி விவரம் கேட்டனர் . அவரும் தனது அடியாட்களை அனுப்பி மனைகளைப் பார்த்து வர ஏற்பாடு செய்தார். மேலும் மனையின் மொத்த தொகையில் 30 சதவிகிதம் பணத்தைக் கட்டினால் மனையை பதிவு செய்து பத்திரத்தை கொடுப்பதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். ராமச்சந்திரன் கூறியபடியே கஸ்பரும் ஏமாந்த இளித்தவாயர்களும் தலா ரூ. 7 லட்சத்து 37 ஆயிரம் 910 பணத்தை அட்வான்ஸ் ஆக கொடுத்துள்ளனர் . மனையின் விவரம் எவ்வளவு சதுர அடி போன்ற விவரங்களை கூறி பின்பு பதிவு செய்து தருவதாக ஒப்பந்தத்தை ராமச்சந்திரன் எழுதி வாங்கிக்கொண்டார். அதற்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் தலா பெற்றுக்கொண்டு அதற்கு ரசீதும் கொடுத்துள்ளார் . ஆனால் பத்திரம் பதிவு செய்து தரவில்லை இந்த நிலையில் கொரானா நோய் பாதிக்கப்பட்டு ராமச்சந்திரன் இறந்துவிட்டார். ராமச்சந்திரனின் மகன் சிவகுமாரிடம் கேட்டதில் சொத்து தகராறு காரணமாக தானும் சாமி குமாரும் பிரிந்து விட்டோம் . சாமி குமாரை காணவில்லை . அவரை தேடிப்பிடித்து அழைத்து வாருங்கள் என கூறிவிட்டார். இதன் பிறகு பலமுறை அலைந்து திரிந்து பின்பு நியூ சோராஞ்சேரி என்ற மனை பிரிவில் விசாரித்த போது ராமச்சந்திரன் இறக்கவில்லை என்ற தகவல் கிடைத்தது . மார்ட்டி கிரேசியஸ் என்பவர் சிவகுமாரின் நிறுவனமான ஆர் கே ரியல் எஸ்டேட் பொது அதிகார பத்திரம் எழுதி கொடுத்துள்ளார். பணத்தை கொடுத்து ஏமாந்துள்ள 200 நபர்கள் வேலப்பன்சாவடியில் உள்ள ஜி ஆர் ரியல் எஸ்டேட் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சாமி குமார் அவனது மனைவி ரேணுகா ஆகியோருக்கு சொத்து நகை பணம் ஏதும் இல்லாமல் அனுபவித்து வருவதாகவும் சிவகுமாருக்கு அவரது தகப்பன் சொத்தை அனுபவிக்க உரிமை உள்ளது என்றும் சீனிவாசா நகர் மோதிரம் பேடு பூந்தமல்லி அணைக்கட்டு சேரி ஆகிய இடங்களில் பத்திரப்பதிவு செய்து தர முடியாது என்று கூறியதால் ஏமாந்த 850க்கும் மேற்பட்ட நபர்கள் தங்களுக்கு வீட்டு மனை பதிவு செய்து தர ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரிடம் புகார் அளித்தனர் . அதன் பேரில் மத்திய குற்ற பிரிவு துணை ஆணையர் பெருமாள் உத்தரவின் பேரில் கூடுதல் துணை ஆணையர் ஸ்டீபன் குற்றப்பிரிவு ஆய்வாளர் ராமசுந்தரம் ஆகியோர் தீர விசாரித்து நேர்மையாக செயல்பட்டு சென்னை போரூர் காரம்பாக்கத்தில் உள்ள காந்திநகர் பகுதியைச் சேர்ந்த பத்மாவதி நகரில் சிவகுமாரின் அலுவலகமான ரோஷன் டவரில் சிவகுமாரை வைத்து அதிரடியாக கைது செய்தனர் . இவனிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து ஏமாந்த பொது மக்களை போலீசார் ஆறுதல் கூறி சமரசப்படுத்தினர் . கைது செய்யப்பட்ட சிவகுமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டடான் .பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறையில் அடைத்தனர் .பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சிவகுமாரை பார்த்து ஊரான் சொத்தில் உடம்பை எப்படி வளர்த்திருக்கான் பார். சினைப் பன்னி மாதிரி உடம்பை வளர்த்திருக்கான் பார் என மண்ணை வாரி தூற்றினர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0