கோவை மாவட்டம் வால்பாறையில் அனைத்துக்கட்சி, மற்றும் அனைத்து சமூக அமைப்பு களும் ஒருங்கிணைந்து வால்பாறை மக்கள் உரிமை மீட்பு குழு என்ற ஒரு புதிய அமைப் பின் ஆலோசனை கூட்டம் வால்பாறையில் உள்ள கிரீன் ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது இக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பு தலைவராக ஜெபராஜ் மற்றும் பல்வேறு அமைப்புக்களை சார்ந்தவர்களையும் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை பகுதி மக்களின் சமூக பொரு ளாதார வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ள மத்திய அரசின் சூழல் உணர்திறன் மசோதாவை கண்டித்து அதை ரத்து செய்ய வலியுறுத்தி சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது,எதிர் வரும் ஜனவரி 7 ஆம் தேதி முதற்கட்டமாக கடையடைப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, இத்தகவலை முழுமையாக அனைத்து பொதுமக்கள் கவனத்திற்கும் கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது இக்கூட்டத்தில் நிர்வாகிகள் த.ம.செந்தில் குமார், ஜே.பி.ஆர்.என்ற ஜே.பாஸ்கர்,என்.பாபுஜி, எஸ்.பொன்கணேசன், சுடர் பாலு,பாலாஜி, ஜேசுதாஸ்,செந்தில் முருகன், சரவணன்,அலி மற்றும் பல்வேறு கட்சி, அமைப்பினரும் கலந்து கொண்டனர்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0