கோவை மாவட்டம் காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பகுதிநேர நர்சாக பணியாற்றி வருபவர் விஜயலட்சுமி .இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் மருத்துவ பரிசோதனை மற்றும் பாலியல் தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் நடத்தினார். அப்போது அந்த பள்ளியில் 3-ம் வகுப்புபடித்து வரும் மாணவியான 9வயது சிறுமி தனக்கு உறவினர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார். இது குறித்து விஜயலட்சுமி அனைத்துபெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தார் .இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிறுமிக்கு பாலியல் சொல்ல கொடுத்ததாக சிறுமியின் உறவினரான ராமன் என்பவரை கைது செய்தனர். இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0