திருச்சியில் பள்ளி வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் ஏழு பேர் படுகாயம்.

திருச்சி கே.கே. நகர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் திருச்சி மாத்தூர் குண்டூர் அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ மாணவிகளை ஏற்றிக் கொண்டு திருச்சி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள ராசி மஹால் சாலையில் வந்த பள்ளி வாகனங்கள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு முந்தி செல்ல முயன்றபோது வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி வாகனத்தில் பயணம் செய்த மாணவ மாணவிகள் ஒரு ஆசிரியர் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்த பொதுமக்கள் வாகன ஓட்டிகள் உடனடியாக வந்து காயமடைந்த மாணவம மாணவிகளை சிகிச்சைக்காக தனியார் மற்றும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் மேலும் விபத்தை ஏற்படுத்திய இரண்டு பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்களை அப்பகுதி மக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். திருச்சியில் தனியார் பள்ளி ஓட்டுனர்கள் குழந்தைகள் வாகனங்களில் இருக்கிறார்கள் என்ற கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் வேகமாக எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்கிறார்கள் மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு பள்ளி வாகனங்களின் ஓட்டுனர்களுக்கு அறிவுரை சொல்லி குழந்தைகளின் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்கிறார்கள். இரு பள்ளி வாகனங்கள் விபத்துக்குள்ளான பகுதியில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.