51 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் கைது..கடன் தொல்லையால் திருடியதாக வாக்குமூலம்.

கோவை பீளமேடு விளாங்குறிச்சி மெயின் ரோட்டில் உள்ள காந்தி மாநகரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி செந்தமிழ் செல்வி (வயது 70) இவர் தனது மூத்த மகன் குடும்பத்துடன் கடந்த 2 ஆண்டுகளாக இந்த வீட்டில் வசித்து வருகிறார். இவரது மருமகன் உடல்நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் வீட்டில் சகாய மேரி என்ற பெண்கடந்த 6 மாதங்களாக வீட்டுவேலை செய்து வருகிறார். இந்த நிலையில்கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29 – ந் தேதி 2024 அன்று சகாயமேரி வீட்டை பூட்டிவிட்டுதனது சொந்த ஊரான காளையார் கோவிலுக்கு உடல் நலக்குறைவான தனது கணவரை பார்க்க சென்று விட்டார். இந்த நிலையில் மருத்துவ செலவுக்காக செந்தமிழ் செல்வி வீட்டில் உள்ள நகைகளை அடகு வைப்பதற்காக பீரோவை திறந்து பார்த்தார் .அதில் இருந்த 51 பவுன் நகைகள் ,பணம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இதுகுறித்து செந்தமிழ் செல்வி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். புகாரில் தனது வீட்டில் வேலை செய்து வந்த சகாய மேரி என்ற பெண்மீது சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார்.போலீசார் சகாயமேரியை பிடித்து துருவி துருவி விசாரணை நடத்தி னார்கள்.விசாரணையில் சகாயமேரி தான் அந்த நகையை திருடியது கண்டுபிடிக் கப்பட்டது. இது யடுத்து நேற்று அவரை கைது செய்தனர்.ரூ 10 லட்சத்துக்கு அதிகமாக கடன் இருந்ததால் திருடியதாக சகாயமேரி வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.