செம ஷாக்கிங் நியூஸ்… இங்கு தங்கம் வாங்கினால் வரி இல்லை – சிறப்பு சலுகையை வெளியிட்ட அரசு..!

பூட்டான் அரசு சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக நாட்டுக்கு வரும் இந்தியர்களுக்கு எவ்விதமான வரியும் இல்லாமல் தங்கத்தை வாங்கி செல்லலாம் என அறிவித்துள்ளது.

பொதுவாக வரியில்லாமல் தங்கம் வாங்க வேண்டும் என்றால் துபாய் போன்ற அரபு நாடுகளுக்கு தான் செல்ல வேண்டும் என கூறப்பட்ட நிலையில் இந்தியாவின் அண்டை நாடான பூட்டானில் இந்த புதிய அறிவிப்பு வெளியிட்டு தங்கம் வாங்குபவர்களை குஷி படுத்தியுள்ளது. பிப்ரவரி 21 அன்று பூட்டான் அரசின் புத்தாண்டு, மன்னர் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த அறிவிப்பை வெளியிட்டது.

இன்று இந்தியர்கள் தங்கம் வாங்க துபாய் வரை செல்கின்றனர். ஏனெனில் தங்கம் விலை இந்தியாவுடன் ஒப்பீடுகையில் சற்று குறைவு தான். அதை மனதில் கொண்டு பூட்டான் அரசு அங்கு சுற்றுலா வரும் இந்தியர்கள் வரிகள் ஏதும் இல்லாமல் தங்கம் வாங்கி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களின் பெரும் பட்செட் ஆக கருதப்படும் தங்கத்திற்கு இப்படி ஒரு ஆஃபர் வந்தால் அது ஜாக்பாட் தான். இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 24 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 55 ஆயிரம் ரூபாய்க்கு மேலும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே பூட்டானில் 10 கிராம் என்றால் 37 ஆயிரத்து 588.49 ஆகும். ஒரு பிடிஎன் என்பது தோராயமாக ஒரு இந்திய ரூபாய்க்கு சமம். அதாவது இந்தியர்கள் 37 ஆயிரத்து 588 ரூபாய் செலுத்தி 10 கிராம் பூட்டானில் வாங்கலாம். பூட்டானில் வரியில்லா தங்கம் வாங்குவதற்கு இந்தியர்கள் நிலையான வளர்ச்சி கட்டணமாக 1200 முதல் 1800 வரை செலுத்த வேண்டும். இந்த சுற்றுலா வரி 2022 ஆம் ஆண்டிலேயே பூட்டான் அரசால் வரையறைபடுத்தப்பட்டது. மேலும் அந்நாட்டு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா சான்று அளிக்கப்பட்ட ஹோட்டலில் ஒரு இரவு தங்கி இருக்க வேண்டும். சுற்றுலா பயணிகள் அமெரிக்க டாலர்கள் மூலமும் தங்கத்தை வாங்கலாம்.

இதன்படி இந்தியர்கள் ஒரு நாளைக்கு 1200 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை செலுத்த வேண்டும். மற்ற நாட்டவர்கள் 65 முதல் 200 டாலர்கள் வரை செலுத்த வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வரியை செலுத்தியவர்கள் மட்டுமே இந்த வரியில்லாத தங்கத்தை வாங்க தகுதியுடையவர்கள். இந்த வரியில்லா தங்கத்தை ஆடம்பர பொருட்கள் விற்கப்படும் வரியில்லா விற்பனை நிலையங்களில் வாங்கலாம். சுற்றுலா துறையை மேம்படுத்துவது மட்டுமே நோக்கம் என்பதால் பூட்டான் வரியில்லா விற்பனை நிலையங்களுக்கு இதனால் லாபம் ஏதும் கிடையாது. மத்திய அரசின் நேரடி விதிகள் சுங்கத்துறையில் மத்திய வாரிய விதிகளின்படி வெளிநாட்டில் இருந்து வரும் ஆண்கள் 50,000 மற்றும் பெண்கள் அதிகபட்சம் 1 லட்சம் வரை இந்தியாவிற்கு வரியில்லாமல் கொண்டு வரலாம் என்றும் சொல்லப்படுகிறது.

அதற்கு மேல் கொண்டு வரப்படும் தங்கத்திற்கு சுங்க வரி செலுத்த வேண்டும். இந்தியாவில் 10 கிராம் 24 கேரட் தூய தங்கம் ரூபாய் 55 ஆயிரம் முதல் 56 ஆயிரம் என வைத்துக்கொண்டால் நீங்கள் பூட்டானில் தங்கம் வாங்க நினைத்தால் இந்த கணக்கை எல்லாம் பார்த்துக் கொள்ளுங்கள். முதலில் பூட்டான் செல்ல தேவைப்படும் தொகை, வரியில்லாமல் தங்கம் வாங்க அங்கு ஹோட்டலில் தங்கக்கூடிய செலவு, மேலும் அரசு விதித்துள்ள கட்டணம், இதையெல்லாம் கணக்கு போட்டு பார்த்தால் பட்ஜெட் எகிறிவிடும். அந்த பணத்தை மிச்சப்படுத்தினால் இந்தியாவில் கூடுதலாக ஒரு 10 கிராம் தங்கம் வாங்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.