கோவையில் கேரள லாட்டரி சீட்டு விற்பனை – முதியவர் உட்பட 3 பேர் கைது..!

கோவை செல்வபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுபாஷினி நேற்று தெலுங்கு பாளையம் ரவுண்டானா பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை 3 பேர் விற்பனை செய்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் தெலுங்கு பாளையம் புதூர் முருகேசன் (வயது 71) கோபால்சாமி (வயது 35) ஜெயந்த் (வயது 36) என்பது தெரியவந்தது இவர்களிடமிருந்து லாட்டரி டிக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.