கோவையில் கஞ்சா ‘குட்கா ,போதை மாத்திரைகளை ஒழிப்பதில் மாநகர போலீஸ் கமிஷனராக பதவி ஏற்றுள்ள பாலகிருஷ்ணன் முழு கவனம் செலுத்தி வருகிறார்.இது தொடர்பாக கடந்த 10 நாட்களில் மட்டும் 20 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் நேற்று குனியமுத்தூரில் உள்ள ஒரு கல்லூரி அருகே தனிப்படை போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் போதை மாத்திரை விற்பனை கும்பல் என்பது தெரியவந்தது .அவர்களிடம் இருந்து 53 போதை மாத்திரைகள் ,பைக் செல்போன் ‘பணம் ரூ.14,600 பறிமுதல் செய்யப்பட்டது 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் குனியமுத்தூர் பாலக்காடு மெயின் ரோடு சேர்ந்த பைசல் ரகுமான் (வயது 24) குறிச்சி பிரிவியைச் சேர்ந்த பைசல் (வயது 28) ரபிக் ( வயது 26) என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக ஆந்திராவைச் சேர்ந்த சுவார் என்பவரை தேடி வருகிறார்கள்.தொடர்ந்து போதை மாத்திரை கும்பல் வேட்டை நடந்து வருகிறது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0