கோவை, பள்ளி – கல்லூரி அருகே புகைபிடிப்பதற்கும், பிடி -சிகரெட் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி கோவை பெரிய கடை வீதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் முன் உள்ள பெட்டிகடையில் பீடி சிகரெட் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. உக்கடம் சப் இன்ஸ்பெக்டர் அஜய் சர்மா நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அந்த கடையில் 10 பாக்கெட் பீடி, 21 பாக்கெட் சிகரெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இந்த பெட்டிக்கடையை நடத்தி வந்த பி.கே செட்டி வீதியை சேர்ந்த முகமத் கபீர் (வயது 53 )கைது செய்யப்பட்டார். பின்னர் இவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0