கோவை ஆர். எஸ். புரம், சிறப்பு சப் இன்ஸ்பெக்டரள் நாகராஜ் ,கனகராஜ் ஆகியோர் நேற்று மாலை ஆர். எஸ் .புரம். காந்தி பார்க், பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள பஸ் ஸ்டாப் அருகே ஒருவர்நின்று கொண்டு கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது இது தொடர்பாக அவரை கைது செய்தனர் .விசாரணையில் அவர் கோவை எம். என். ஜி வீதியைச் சேர்ந்த வேல்முருகன் ( வயது 45 )என்பது தெரியவந்தது. இவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரிடமிருந்து 22 லாட்டரி டிக்கெட், இருசக்கர வாகனம், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0