திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் கலெக்டர் ஆய்வு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேற்று திருவரம்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள குண்டூர் ஊராட்சி நவல்பட்டு ஊராட்சி வேங்குர் ஊராட்சி மற்றும் திருச்சி மாநகராட்சி 40 வது வார்டு திருவரம்பூர் மூப்பனார் நகர் பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரின் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் குறைகளை கேட்டதுடன் அந்தந்த பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு பணிகள் அரசின் பல்வேறு துறை அலுவலகங்களை ஆய்வு செய்தார் திருவளர்ச்சிபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்ததோடு மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு கலந்துரையாடினார் பின்னர் குண்டூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு கால்நடைகளுக்கு தேவையான மருந்து இருப்பு விவரம் குறித்து கேட்டறிந்தார் அதன் பிறகு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்தார் இதே போல் ரேஷன் கடை போலீஸ் நிலையம் தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் கலெக்டர் ஆய்வு செய்து மேற்கொண்டார் உங்களை தேடி உங்கள் ஊரின் திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமில் 343 மனுக்கள் பெறப்பட்டன. தமிழக அரசு இந்த திட்டத்தால் ஏராளமான பொதுமக்கள் மனு கொடுத்து பயன்பெற்றனர்.