பள்ளி மாணவ மாணவிகள் வண்ண அச்சு மூலம் நூதன விழிப்புணர்வு …

நாட்டின் விடுதலைக்காக போராடிய தேசத்தந்தை மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினத்தை முன்னிட்டு  அவருக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் . மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை மத நல்லிணக்க தினமாக கடைபிடிக்க கடைபிடிக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின்  உத்தரவிட்டிருந்தார் . இதனையொட்டி தஞ்சாவூர் மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகள் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் மாணவ மாணவிகள் “ மதவெறிக்கு எதிராக அணி திரள்வோம் , மதச்சார்பின்மையை காப்போம் , மதவெறியை உடைப்போம் , மனிதநேயம் காப்போம் , மானுடம் காப்போம் , வேற்றுமையில் ஒற்றுமை காப்போம்; மதவெறி சக்திகளை வேரறுப்போம்; பிளவுபடுத்தும் சக்திகளை வேரறுப்போம் ” உள்ளிட்ட வாசகங்களை எழுதியதுடன் தங்களது உள்ளங்கைகளில் வண்ணங்களை எடுத்து பதாகையில் பதித்து மதவெறிக்கு எதிராகவும் மத நல்லிணக்கத்துக்கு ஆதரவாகவும்  நூதன வகையில் பள்ளி முதல்வர் சந்திர மௌலி , அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார்  உள்ளிட்ட ஆசிரியர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமௌலி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.  இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் மேலாளர் ஞானசுந்தரி , மேற்பார்வையாளர்  கல்யாணசுந்தரம் , தன்னார்வலர் ஆர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர் .