தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் மார்ச் 20 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற இருப்பதால் மார்ச் 19 ஆம் தேதி விடுமுறை என்று அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.
இதனால் வருகிற ஞாயிற்றுக்கிழமை கட்டாயமான முறையில் பள்ளிகள் செயல்படும் என்றும் ஆனால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்து உள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி பல சிக்கல்களை ஏற்படுத்தி வந்தது. மேலும் அனைத்து உலக நாடுகளிலும் வர்த்தகம், பொருளாதாரம், உற்பத்தி போன்ற துறைகளை காட்டிலும் மீட்டெடுக்க முடியாத நாட்களாக மாணவர்களின் கல்வியும் சீரழிந்து விட்டது என்றே கூறலாம். மேலும் இந்த கொரோனாவின் முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டத்தில் இருந்த போது பள்ளிகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டு வந்தது. இந்த வகையில் மாணவர்கள் பாடத்தை கற்றாலும் பள்ளிக்கு சென்று அங்கு இருக்கும் சூழலில் பாடம் கற்பது மிகவும் சிறந்ததாக இருந்து வந்தது. இதனை இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் இயல்பு வாழ்க்கையை இழந்து வந்தனர்.
இந்நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் தான் தமிழகம் இயல்பு நிலைக்கு மாறியது. அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிள் திறக்கப்பட்டது. மீண்டும் வந்த மூன்றாம் அலை மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 15 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்பிறகு தமிழகத்தின் அனைத்து பள்ளிகளும் முழுமையாக மீண்டும் செயல்படத் தொடங்கி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்தாக 6 முதல் 9 ஆம் வகுப்பிற்கான ஆண்டு இறுதி தேர்வு தேதிகளையும் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் தற்போது வருகின்ற மார்ச் 20 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் இடையே பள்ளி மேலாண்மை குழு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மார்ச் 20 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளி மேலாண்மை குழு மற்றும் அனைத்து பெற்றோர் கூட்டம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் நடத்தப்பட உள்ளது.
இதன் காரணமாக வரும் மார்ச் 19ஆம் தேதி சனிக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வர கட்டாயமான முறையில் வர வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர். ஆனால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த கூட்டம் தமிழகத்தில் உள்ள 37, 391 அரசு பள்ளிகளிலும், பள்ளி அளவிலான மேலாண்மை கொள்கை மறுசீரமைக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் 52 லட்சம் குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.