கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டு உள்ளார்.
கோவையில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் வாட்டுகிறது. இது எந்த மாதிரியான வானிலை என்பதை கண்டறிவதில் மக்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. தமிழகத்தில் கோடை காலம் நடந்து வருகிறது. இந்த நிலையில் கத்தரி வெயிலின் போது ஒரு பகுதியில் சுட்டெரித்தாலும் மறு பகுதியில் மழை பெய்யத் தான் செய்தது.
இந்த நிலையில் கோடையில் கோவையில் காலை 8 மணிக்கெல்லாம் கடுமையான வெயில் நிலவி வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றும் நிலவியது. இன்று மழையே வராது என கணிக்கும் அளவுக்கு வானம் தெளிவாக இருந்து வருகிறது.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் 20, 21 ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறி இருந்த நிலையில்
ஜூன் 23 ல் 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது . அதன்படி, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையில் கன மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துக் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டு உள்ளார்.