கோவை அருகே உள்ள சிந்தாமணிபுதூர், சந்தான லட்சுமி நகரை சேர்ந்தவர் பெருமாள் சாமி. இவரது மகன் இளமாறன் ( வயது 13) ஒண்டிப்புதூரில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று நண்பர்களுடன் கண்ணம்பாளையம், மனோஜ் நகரில் உள்ள குளத்துக்கு குளிக்க சென்றான். அப்போது ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தான். இது குறித்து அவரது தாயார் ஈஸ்வரி சூலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0