கோவையை அடுத்த பேரூர் பச்சாபாளையம் பகுதியில் மறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் மறைந்ததை நினைவாக எஸ்பிபி வனம் என்ற பெயரில் இசை குறிப்பின் வடிவில் பூங்கா ஒன்று சிறு துளி அமைப்பின் சார்பில் கடந்த டிசம்பர் 10 2020 நிறுவப்பட்டு அன்று நடிகர் சின்ன கலைவாணர் விவேக் அடிக்கல் நாட்டப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. குறிப்பாக 74 வயதில் எஸ்பிபி மறைந்ததை நினைவு படுத்தும் வகையில் எழுபத்தி நான்கு வகையான இசைக்கருவிகள் செய்யப்படும் மரங்கள் நடப்பட்டன.அதன் தொடர்ச்சியாக வனம் ஆனது சிறுதுளி அமைப்பின் சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தது எனினும் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவில்லை . தற்போது எஸ்பிபி மகனான எஸ்பிபி சரண் மற்றும் எஸ்பிபி சகோதரி எஸ் பி சைலஜா முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது இந்நிகழ்வில் பிரபல பின்னணி பாடகர் மறைந்த மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன் கலந்து கொண்டார் . மேலும் இந்நிகழ்வில் சிறு துளி அமைப்பின் அறங்காவலர் வனிதா மோகன், திரை இசை ஆர்வலர்கள் சிஜி குமார் ,சந்துரு, ஜான் சுந்தர், மௌனராகம் முரளி, சிறுதுளி அமைப்பின் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆபீசர்ஸ் காலனி வாழ் மக்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கலந்துகொண்ட எஸ் பி பி சரண் கூறுகையில் அருமையான சிந்தனை கொண்டு உருவாக்கிய இந்த இசையை வடிவிலான வனத்தை உருவாக்கி தன் தந்தை பெயரை சூட்டி கௌரவித்த சிறு தொழில் அமைப்பிற்கு தங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், இந்த வனம் துவங்கி வைத்த நடிகர் விவேக்கின் எதிர்பாராத மரணம் வருத்தம் அளித்தாலும் தற்போது அவர்கள் இருவரும் ஒன்றாக அனைவரையும் வாழ்த்துவார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0