கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாதாந்திர குற்றத்தடுப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் பேசியதாவது:-காவல் நிலையங்களில் தேங்கியுள்ள வழக்குகளை விரைந்து முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குற்றவாளிகளை கைது செய்து அவர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். தடைசெய்யப்பட்டபுகையிலை குட்கா பொருட்கள்,லாட்டரி சீட்டு விற்பனை ஆகியவற்றை அறவே ஒழிக்க வேண்டும்,விபத்துபலியைதடுப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும்..இரவுநேர ரோந்துப் பணியை அதிகரிக்க வேண்டும். பெண்களுக்குபாலியல் தொல்லை கொடுப்பவர்களைகுண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்..குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் வெளியே வந்தாலும் அவர் கள் நடவடிக்கையை போலீசார கண்காணிக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். மேலும் .பல்வேறு வழக்குகளில் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்த போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கவுரவிக்கப்பட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் இவர்களுக்கு சுழற்கோப்பை நற்சான்றிதழ் பரிசு வழங்கினார். குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த மேட்டுப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம், சிறப்பாக பணிபுரிந்த காரமடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முனிசாமி நிலைய பதிவேடுகளை சிறப்பான முறையில் பராமரித்த காவல் நிலைய தலைமை காவலர் குமரவேல், சிறந்த முறையில் கோப்புகளை பதிவேற்றம் செய்த பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய காவலர் சுரேஷ்குமார்,சிறப்பான முறையில் வழக்கினை கோப்பிற்கு எடுத்து திறம்பட செயல்பட்ட மேட்டுப்பாளையம் காவல் நிலைய நீதிமன்ற காவலர்
தாமோதரன் பெண்கள் உதவி மையத்தில் சிறந்த முறையில் பணியாற்றிய பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமைக் காவலர்.சுனிதா மாவட்டத்தில் காணாமல் போன நபர்களை அதிக அளவில் கண்டுபிடித்த துடியலூர் காவல் நிலைய தலைமை காவலர் ராமராஜ் ஆகியோர்களுக்கு
சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்களையும், சிறந்த காவல் நிலையமாக மேட்டுப்பாளைய காவல் நிலையம் தேர்வு செய்து அதற்கான சுழற்கோப்பையை மேட்டுப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகத்துக்கு வழங்கபட்டது. ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற சிறந்த செயல்பாடுகள் குறித்து பரிசீலனை செய்து சுழற்கோப்பை வழங்கப்படும் என்று கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இப்புதிய திட்டம் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோன்ற பாராட்டுக்கள் காவல்துறையினர் திறம்பட செயல்படுவதற்கு ஊக்குவிப்பாக அமைகிறது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0