சத்தியமங்கலம் நகராட்சி கூட்டம் – 19 தீர்மானங்கள் நிறைவேற்றம்…

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம்  சத்தியமங்கலம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் ஜானகி ராமசாமி தலைமை தாங்கினார். கமிஷனர் செல்வம், துணை தலைவர் நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் குடிநீர் விநியோகம், தெருவிளக்கு பராமரிப்பு, வடிகால் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில்  பொறியாளர் கதிர்வேல், மேலாளர் செந்தில்வேல், சுகாதார அலுவலர் சக்திவேல், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.