அரசு அதிகாரி வீட்டில் சந்தன மரம் வெட்டி கடத்தல்.

கோவை ரேஸ் கோர்சில் தொழிலாளர் நல அதிகாரிகள் குடியிருப்பு உள்ளது. இங்கு வசிப்பவர் ஸ்ரீதரன் வயது 36 ) இவர் சுகாதார அலுவலக துணை இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 16 -ஆம் தேதி குடும்பத்துடன் சேலம் சென்றிருந்தார். அப்போது யாரோ மர்ம கும்பல் இவரது வீட்டின் அருகே வளர்ந்திருந்த 20 அடி உயரம் கொண்ட 3 சந்தன மரங்களை வெட்டி திருடிசென்று விட்டனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.