ஓய்வு பெற்ற வருமானவரித்துறை அதிகாரி வீட்டில் சந்தமரம் வெட்டி கடத்தல்.

கோவை துடியலூர் என் ஜி.ஜி ஓ காலனி, வி. கே. எல். வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் ( வயது 65) இவர். வருமானவரித்துறை அலுவலகத்தில்அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இவர் நேற்று முன் தினம் இரவில் வீட்டை பூட்டிவிட்டு தூங்க சென்று விட்டார்..அப்போது யாரோ வீட்டின் காம்பவுண்ட்சுவர் கேட்டில் உள்ள பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த ஒரு சந்தன மரத்தை வெட்டி கடத்திச் சென்று விட்டனர். இது குறித்து சுப்பிரமணியம் துடியலூர் போலீசில் புகார் செய்து ள்ளார். சப் இன்ஸ்பெக்டர் குரு கணேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.