தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் மாட்டுவண்டி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி ஜங்ஷன் விக்னேஷ் ஹோட்டல் எதிரே மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல. இராசாமணி தலைமையில் நடைபெற்றது இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதி நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். இந்த உண்ணவிரதப் போராட்டத்திற்கு சம்மேளனத்தின் செயலாளர் ரவிக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார் துணை தலைவர் ரவிச்சந்தின் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார் இந்த நிகழ்வுக்கு துணை செயலர்வனராஜன் ,திருப்பூர் வெங்கடசலாம், ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியை தங்கவேல் ஒருங்கிணைத்தார் இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளின் தலைவர் ஜெயராமன் மற்றும் அடையார் கண்ணன், திருச்சி மாவட்ட பொருளாளர் கலிவரதன், திருச்சி மாவட்ட தலைவர் சுப்பு திருவரம்பூர் வெங்கடாசலம், மாட்டுவண்டி சங்க தலைவர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் துறையூர் சங்க தலைவர் மோகன்தாஸ் அனைவருக்கும் நன்றி கூறினார். முன்னதாக சம்மேளன தலைவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அரசு நிறுத்தி வைத்துள்ள மணல் குவாரிகளை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும், காலாவதியான சுங்கசாவடிகளை அகற்ற வேண்டும் எனவும், ON LINE அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும் எனவும், HIT & RUN 106 (2) விதியை ரத்து செய்ய வேண்டும் எனவும், லாரிகளில் அதிக பாரம் ஏற்றுவதை தடை செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினார். மேலும் தமிழக முதல்வர் எங்களது கோரிக்கைகளை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் உண்ணாவிரதத்திற்கு பிறகு பொது பணி அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர். உண்ணாவிரதத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0