கோவை விமான நிலையத்தில் இருந்து ஒரே நாளில் 10,132 பயணிகள்பயணம்.

கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூர் ,மும்பை டெல்லி என உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சார்ஜா, சிங்கப்பூர், அபிதாபி ஆகிய வெளிநாடு களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் 32 விமானங்கள் இயக்கப் படுகிறது. கோவை மற்றும் அண்டை மாவட்டங்களான நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டு க்கல், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பயணிகளும் பயணித்து வருகிறார்கள். இதனால் கோவை விமான நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை கோவை விமான நிலையத்துக்கு வந்து செல்வோரின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 4,678 பயணிகள் விமானத்தில் கோவை வந்தனர்.5411 பயணிகள் கோவையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சென்றனர். ஒட்டுமொத்தமாக 10 ஆயிரத்து 89 பயணிகள் வந்து சென்றனர் .அதுவே இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையானநேற்று முன்தினம் 454வெளிநாட்டு பயணிகள் உட்பட 4,075 பயணிகள் விமானத்தில் கோவைக்கு வந்தனர். அதுபோன்று 626 வெளிநாட்டு பயணிகள் உட்பட 5,427 பயணிகள் கோவையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு சென்றனர். ஒட்டுமொத்தமாக 10, ஆயிரத்து132 பயணிகள் வந்து சென்றனர். கடந்த வாரத்தை விட 43 பயணிகள் அதிகமாக வந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.