பள்ளிக்கூடம் அருகே கள்ள சந்தையில் மது – குட்கா விற்பனை. 517 மதுபாட்டில் பறிமுதல்

கோவை வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ( பொறுப்பு) காசி பாண்டியன்,சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன்ஆகியோர் நேற்று வடவள்ளி மருதமலை ரோட்டில் உள்ள தேவஸ்தான பள்ளிக்கூடம் அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள ஒரு மறைவான இடத்தில் மதுபாட்டில்களை லாரியில் பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியுடன் 517 மது பாட்டில்களும் , 150கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா ) 4 செல்போன்களும் , 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வீரகேரளம் சிவகாமி நகரை சேர்ந்த குமரேசன் (வயது 57) கஸ்தூரி நாயக்கன்பாளையம் ரங்கநாதன் (வயது 50) திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்த சதீஷ் பாபு ( வயது 43) பீகார் மாநிலத்தைச் சேர்ந்த விஸ்வநாத் குமார் ( வயது 20 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டனர்.