கோவை; தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில பொருளாளர் உமர் தலைமையில் மாநில செயலாளர்சாகுல் அமீது, சுல்தான் அமீர், சாதிக் அலி, ஆசிக் அகமது, உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று மாலை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயனிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டம் மேட்டுப்பாளைய த்தை சேர்ந்தவர் தவு பீக் உமர் (வயது 21 )ஆட்டோ டிரைவர். கடந்த மாதம் 22ஆம் தேதி மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் குரு சந்திர வடிவேல் என்பவர் தவு பீக் உமரை தொடர்பு கொண்டு காவல் நிலையம் வருமாறு அழைத்தார். காவல் நிலையத்திற்கு சென்று உள்ளார். அங்கு அவரை தனி அறையில் அடைத்து நிர்வாணப்படுத்தி பைப்பில் ஈரத் துணியை சுற்றி சப் இன்ஸ்பெக்டர் அடித்து துன்புறுத்தி உள்ளார். பின்னர் அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டனர். வலி தாங்க முடியாமல் தவித்த அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது நரம்புகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு செயல் இழந்ததாக கூறியுள்ளனர். இது தொடர்பாக புகார் அளிக்க தவு பீக் உமரின் தாயார் மேட்டுப்பாளையம் காவல் நிலையம் சென்றார். அங்கு அவரது புகாரை வாங்கவில்லை. இந்த சம்பவத்தில் சப் இன்ஸ்பெக்டர்குரு சந்திர வடிவேலு மீது நடவடி க்கை எடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0