சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக எஸ்.முரளிதர் நியமனம்..!!

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் 33வது தலைமை நீதிபதியாக எஸ்.முரளிதர் பதவியேற்க உள்ளார். ஆகஸ்ட் 8, 1961 இல் பிறந்த நீதிபதி எஸ்.முரளிதர் ஒடிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆவார். நீதிபதி எஸ்.முரளிதர் 1984 செப்டம்பர் 12ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்து, சென்னை சிவில் நீதிமன்றங்களில் தனது வழக்கறிஞர் பணியைத் தொடங்கி, டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை கையாண்டுள்ளார். அவர் மே 29, 2006 அன்று டெல்லி உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

பின்னர் அவர் 29 ஆகஸ்ட் 2007 அன்று நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் மார்ச் 6, 2020 அன்று பஞ்சாப்-ஆரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார். மேலும், அவர் டிசம்பர் 31, 2020 அன்று ஒடிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி 12 ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து எம்.துரைசாமி பொறுப்பு நீதிபதியாக பதவி வகித்தார். ஓய்வு பெற்ற பிறகு டி.ராஜா தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.முரளிதர் நியமிக்கப்பட்டுள்ளார். 1970-களுக்குப் பிறகு மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் மொழி தெரிந்த எஸ்.முரளிதரராய் நியமிக்கப்பட்டுள்ளார்.