கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். கார்த்திகேயன் தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் சிறப்பு பிரிவு காவல் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விவாதிப்பு கூட்டத்தில் கடந்த மாதத்தில் நடந்த கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் போதைப் பொருட்கள் விற்பனைபோன்ற குற்ற செயல்களில் தொடர்புடைய எதிரிகளை திறம்பட செயல்பட்டு கைது செய்த மற்றும் நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல் ஆய்வாளர்கள்-3, உதவி ஆய்வாளர்கள்-06, சிறப்பு உதவி ஆய்வாளர்கள்-8, தலைமை காவலர்கள்-05, முதல் நிலைக் காவலர்கள்-03, காவலர்கள்-17 என மொத்தம்-42 ஆகியோரை பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவின் பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளை பாராட்டி,பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.மேலும் காவல் கண்காணிப்பாளர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கு
போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும் மற்றும் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என அறிவுரை வழங்கினார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆயுதப்படை மைதானத்தில் காவல் வாகனங்களை ஆய்வு செய்தார்.அவைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0