வேடசந்தூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை ராணுவ வீரர் பெல்ட்டால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூல்ஸ் மிலிட்டரிகாரனுக்கு கிடையாது – மனநலம் பாதிக்கப்பட்டவரிடம் ஹீரோயிசம் காட்டிய ராணுவ வீரர்
வேடசந்தூர், ஆத்துமேடு நால்ரோட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை ராணுவ வீரர் என அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவர் கொடூரமாக தாக்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாகச் சென்ற செய்தியாளர் கேமராவை ஆன் செய்து படம்பிடிப்பது தெரிந்தும் மீண்டும் தனது பெல்ட்டை கழற்றி மனநலம் பாதிக்கப்பட்டவரை தாக்கினார்.
அத்தோடு இல்லாமல், “நான் ராணுவத்தில் வேலை செய்யும் பொழுது எனது மேலதிகாரியையே கழுத்தில் கத்தியால் குத்தியதால் என்னை சஸ்பெண்ட் செய்தார்கள்” என்று பகிரங்கமாக கூறினார். மேலும், ”ரூல்ஸ் எல்லாம் மனுசனுக்கு தான், மிலிட்டரிகாரனுக்கு இல்லை” என்று ஆக்ரோஷமாக கூறினார்.
அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுவதற்கு முன்பாக இவரை போன்ற நபர்களை குடும்பத்தினரோ அல்லது காவல் துறையினரோ பிடித்து மனநல காப்பகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று அப்பகுதியில் கூடியிருந்தவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.