கோவை அருகே ஆர்.டி.ஓ. சோதனை சாவடியில் ரூ.3,62,500 லஞ்ச பணம் பறிமுதல். 2 பேர் சிக்கினர்.

கோவை – பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை, க.க சாவடியில் ஆர்.டி.ஓ. சோதனை சாவடி உள்ளது. இங்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று நடத்திய அதிரடி சோதனையில், மோட்டார் வாகன ஆய்வாளர் குமாரிடம் இருந்து ரூ. 3,21,000 பணம் பறிமுதல் செய்யப் பட்டது. இதேபோலஅலுவலகப் பெண் உதவியாளர் ரோஸ்லின் என்பவரிடம் இருந்து ரூ. 38 ஆயிரம் கணக்கில் வராத பணம் பறிமுதல்செய்யப்பட்டது. சோதனைச் சாவடியில் இருந்த கடிதப் பெட்டியில் 3,500 ரூபாய் சிக்கியது.. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.