கோவையை சேர்ந்த 29 வயது பெண் இன்ஜினியர் ஒருவர் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் .அவரது வாட்ஸ்அப்புக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் பகுதி நேர வேலை இருப்பதாகவும், அதில் சேர்ந்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. உடனே அவர் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய பெண் தான் பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், நாங்கள் தினமும் ஒரு புகைப்படத்தைஅனுப்புவோம். அதற்கு நீங்கள் விளக்கம் கொடுத்தால் அதிகமாக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறினார். உடனே அந்தப் பெண்னும் இந்த வேலையில் சேருவதாக கூறினார். இதை தொடர்ந்து அவருக்கு டெலிகிராமில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு குரூப்பில் இணைக்கப்பட்டார். அப்போது அந்தப் பெண் இன்ஜினியருக்கு லாபத்தொகை வழங்கப்பட்டது .இந்த நிலையில் பெண் இன்ஜினியரை தொடர்பு கொண்டு நாங்கள் தற்போது பிட்காயினில் முதலீடு தொடங்கி உள்ளோம்.. அதில் முதலீடு செய்தால் அதிகமாக சம்பாதிக்கலாம் என்று அந்த பெண் கூறினார். இதை யடுத்து பெண் இன்ஜினியருக்கு செல்போன் செயலியில் ஐ.டி. மற்றும் ரகசிய எண் கொடுக்கப்பட்டது. அதில் அவர் பல்வேறு தவணைகளாக ரூ. 5 லட்சத்து 50 ஆயிரம்முதலீடு செய்தார். அந்த பணத்தை அவர் தனது வங்கி கணக்குக்கு மாற்ற முயன்ற போது முடியவில்லை. உடனே அவர் அந்த பெண் ஊழியரிடம் தொடர்பு கொண்ட போதும் செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டுஇருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண் இன்ஜினியர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில்புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0