சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் ஜானகிராமன், கருப்பண்ண உடையார், மாரப்பன், ரசாக், வேழவேந்தன் ஆகியோருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெறுகிறது. இந்நிலையில் அதற்கு முன்னதாக கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதன் வகையில்; பூம்புகார் தொகுதி உப்பனாற்றின் குறுக்கே அணை கட்டப்படுமா? – எம்.எல்.ஏ முருகன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன்; ரூ.9.73 கோடி செலவில் உப்பனாற்றின் குறுக்கே அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கடல் நீர் உட்புகுவதை தடுக்க நந்தனாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும். கடல் நீர் கழிமுகம் வழியாக உட்புகுவதை தடுக்க ரூ.3,384 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் இவ்வாறு கூறினார். உத்திரமேரூரில் மழையால் பாலாறு, செய்யாறு ஆறுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தடுப்பணை கட்டப்படுமா? என சுந்தர் எம்எல்ஏ கேள்வி எழுப்பினார். தேவையான இடங்களில் தடுப்பணை கட்டப்படும் என அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.